கடலே கடலலையே......!
கனலலையாய் வந்தாய்
கடும் தாண்டவம் தான் ஆடினாய்
உயிர்களையே சூரையாடினாய்
உறவுகளை தான் அனாதையாக்கினாய்
இரக்கமில்லா இராட்சனாய்...!
உழைப்பையும் அள்ளிக் கொடுத்தாய்
உயிர்களையும் அள்ளி எடுத்தாய்
உறவின்றி தவிக்க விட்டாய்
உணர்வுகளை தான் கொதிக்க விட்டாய்...!
சொல்லாமல் தான் வந்தாய்..
சொந்தங்களையும் நீ கொன்றாய்..
கோரப்பசி கொண்டு தின்றாய்..
கொடுமை இதை நீயேன் செய்தாய்..!
என்ன கோபமோ உனக்கு..
என்ன பசியோ உனக்கு..
என்ன மனமோ உனக்கு...
என்று பேசத்தான் தோன்றுதே.
என்ன பேசினாலும் விளங்காதே உனக்கு...!
இயற்க்கை அனர்த்ததால் பலியான அனைத்து மக்களுக்கும் கண்ணீர் அஞ்சலிகள்...

Keine Kommentare:
Kommentar veröffentlichen