29. Mai 2006

என் தோழி...!


தோல்வி எனைத் தொடும் முன்னே
தோழமையுடன் தோழ் கொடுப்பாயடி.
கவலைகள், மனதை காயப்படுத்தும் முன்னே
காயத்தை ஆற்றும், மருந்தாக, வருவாயடி..!

ஒரு நாள் பேசாவிட்டால்
ஒரு ஜென்மம் போனதடி – என
நீ துடிப்பதை நான் நன்கு அறிவேனடி!
நினைவினில் நிஜமானவளே - என்
கனவிலும் கரைந்தாயடி..

என் தோழி என்ற உரிமையுடனே
உன் தோழில் சாய்வேனடி..
உன் சிநேகிதி என்ற உரிமையுடனே
உனை நான் அதிகாரமும் செய்வேனடி!

என் ஒற்றை விழியாக
என் தோழி ,- நீ
என்னில்,
என்றுமே வாழ்வாயாடி.. !

25. Februar 2006

இதயமே என் இதயமே




என்னைக் கேளாமலே..
என்னவனின் நினைவுகளை..
நிரப்பிவிட்டாய்..
என் இதயச் சுவர் எங்கும்...!

உன்னைக் கேளாமலே..
என்னவனையே..
பூட்டி வைத்துவிட்டேன்..
உனக்குள்...!

உன்னை..
கலங்க வைப்பதும்,காயப்படுத்துவதும்..
சிதற வைப்பதும்,சிரிக்கவைப்பதும்...
நானல்ல ..என்னவனே தான்..!

இதயமே...
அது எனக்கு புரிகிறது..
உனக்கு புரிகிறதா..
புரிந்தால் என்னை மன்னிப்பாயா
இல்லை சிந்திப்பாயா....

26. Dezember 2005

கடலே கடலலையே...!


கடலே கடலலையே......!


கனலலையாய் வந்தாய்
கடும் தாண்டவம் தான் ஆடினாய்
உயிர்களையே சூரையாடினாய்
உறவுகளை தான் அனாதையாக்கினாய்
இரக்கமில்லா இராட்சனாய்...!

உழைப்பையும் அள்ளிக் கொடுத்தாய்
உயிர்களையும் அள்ளி எடுத்தாய்
உறவின்றி தவிக்க விட்டாய்
உணர்வுகளை தான் கொதிக்க விட்டாய்...!

சொல்லாமல் தான் வந்தாய்..
சொந்தங்களையும் நீ கொன்றாய்..
கோரப்பசி கொண்டு தின்றாய்..
கொடுமை இதை நீயேன் செய்தாய்..!

என்ன கோபமோ உனக்கு..
என்ன பசியோ உனக்கு..
என்ன மனமோ உனக்கு...
என்று பேசத்தான் தோன்றுதே.
என்ன பேசினாலும் விளங்காதே உனக்கு...!

இயற்க்கை அனர்த்ததால் பலியான அனைத்து மக்களுக்கும் கண்ணீர் அஞ்சலிகள்...

20. Dezember 2005

நீயே தான்....!




நீயே தான்....!

வரும் போதும்.. போகும் போதும்
வந்தென்னைத் தொட்டுச் செல்கிறாய்...!
சிரிக்கும் போதும்.. பேசும் போதும்..
சில்லென்று நீ வருகிறாய்...!
மழைவரும் முன்னே நீ வருவாய் என..
மகிழ்வுடன் காத்திருக்கிறேன்..!

நான் வைத்திருந்த பூவை
நீ பறித்துக் கொண்டு போன போது..
நானோ வாடி நின்றேன்..!
அந்த பூவையே நீ திருப்பி தந்த பிறகு..
அப்படியே பூரித்து நின்றேன்...!

நீ இல்லாத நாட்களில்..
உன்னைத் தேடித் தேடி திரிந்த
நாட்களைத்தான் மறக்கமுடியுமா..
நான் உன்னைத் தேடாத நாளிலும்,
நீ என்னைத் தேடி வந்ததைதான்
மறக்கமுடியுமா...

நீ தான் யாரோ..
அந்த தென்றல் காற்றோ..
நீயே தான்....!

நீ வேண்டும்...!




நீ வேண்டும்...!



என் மனதை புரிந்து நடக்கும்..
மன்மதனாக ..

என் குறும்புகளை ரசிக்கும்
ரசிகனாக ..

என்னைக் கண்ணிமை போல் காக்கும்
காவலனாக..

என் நினைவுகளுடன் இருக்கும்
காதலனாக ..

என் சின்னச் சின்ன ஆசைகளையும்
நிறைவேற்றுபவனாக ..

என்னைச் சோகங்கள் சுட்டெரிக்கும் போதும்
தேற்றுபவனாக..

என்னுடன் அன்பு சண்டை போடும்
அன்பானவனாக ..

என்னுடன் இனிமையாக பேசும்
இனிமையானவனாக ..

என்னுடன் சேர்ந்து ஊர் சுற்றும்
தோழனாக ..

என் மனதை மேகமாய் வந்து
சூழ்ந்தவனே..

என்னுடன் என்றும்.. நீ வேண்டும்
நிரந்தரமாக ...!

19. Dezember 2005

என் அன்புத் தெய்வம்






என் அன்புத் தெய்வம்

அம்மா என் அம்மா..
அன்பாய் அரவணைத்து..
ஆசை முத்தம் தந்து..
ஆராரிரோ பாடல் பாடி
என்னை தூங்க வைப்பாள் என் அம்மா..!

காலையில் நான் தூக்கத்தில் இருக்க..
என் பக்கத்தில் வந்து..
என் தலையை வருடியபடி..
என் நெற்றியில் முத்தமிட்டு..
காலை வணக்கம் சொல்லி ..
சிரிப்புடன் அரவணைப்பாள் என் அம்மா...!

படிப்பும் சொல்லித்தந்து ..
பாடல்களையும் படித்து காட்டி
தமிழ் பண்பாடுகளையும் சொல்லித் தந்து
நன்றாக படிக்க சொல்லி
உற்சாகமும் தருகிறாள் என் அம்மா...!

நான் கோபத்தில் சாப்பிடாமல் இருந்தால்
என்னிடம் எதோ சொல்லி
என்னை சமாதான படுத்தி..
எனக்கு சாப்பாடும் ஊட்டி விடுவாள் என் அம்மா...!

எனக்கு ஒரு சின்ன காயமென்றாலும்..
பட படர்த்த இதயத்துடன்
துடி துடித்த பார்வையுடன்
என் காயத்துக்கும் மருந்து போடுவாள் என் அம்மா...!

என் அம்மா நீ அம்மா..
என் அன்புத் தெய்வம் நீதானம்மா.. !

2. Dezember 2005

என்னவனே...



என்னவனே


எனக்குள் இருப்பவனே..
என்னுள் நிறைந்தவனே..
என்னவனுக்காக நான் எழுதும்..
என் முதல் கவிதை....!

எனக்காக இவ்வுலகத்தில் பிறந்தவனே..
என் நினைவுடன் வாழ்பவனே..
என் புன்னகையை சேமித்தவனே..
என் வருகைக்காக காத்திருப்பவனே..
என் வாழ்வையும் மாற்றியவனே..
என் கவிதைக்கும் காரணமானவனே...
என்னுடன் உன் சோகத்தை பகிர்ந்தவனே ..
என்னுடன் உன் சந்தோசங்களையும் பகிர்ந்தவனே ..
என் உயிருக்கும் மேலானவனே..
என்றும் உனை நான் மறவேனே...!

வணக்கம்...

அனைவருக்கும் வணக்கம்...

என்னுடைய வலைப்பூவில் என்னுடைய கவிதைகளும்.. நான் ரசித்தவை ..எனக்கு பிடித்தவைகளை உங்களுடன் பகிர்கின்றேன்...

நன்றி...